Sunday, February 26, 2012

என் கண்ணம்மாவின் வைரத்துளிகள் - 3


கண்மூடும் போதெல்லாம் மறைவதற்கு,

கண்களால் பிறக்கவில்லை,

புரிந்ததால் பிறந்தது - உணர்வால் வளர்த்தது...

உன் அருகில் இருக்கும் பொழுது,

என் வார்த்தைக்கு மட்டுமே ஓய்வு..

கடலாக நிறைந்திருக்கும் உன் நினைவுகளிலிருந்து,

கரைசேர இயலவில்லை அலையாக பிறந்ததினால்..

மூடிய விழிகளுக்குள் உன் நினைவுகள் இன்றும்,

நினைவுகளில் நிறைத்து இருப்பவனுக்கு இனியவளின் வரிகள்..

Saturday, February 25, 2012

என் கண்ணம்மாவின் வைரத்துளிகள் - 2




உறவாய் பிறக்கவில்லை உரிமை சொல்லாமல் இருக்க..

மகிழ்ச்சி மட்டும் நிறைந்திருக்கவில்லை நட்பென கொள்ள..

இனிமையும், வளிமையும் சுமக்கவில்லை காதலென்று சொல்ல..

உறவுக்கும் மீறிய உணர்வு..

நட்புக்கும் மீறிய பகிர்வு..

காதலுக்கும் மீறிய பிரிவு..

நிறைத்து இருப்பதாக உணர்கிறேன் !!..

என் கண்ணம்மாவின் வைரத்துளிகள் - 1



புவியின் தோற்றம் அறியேன் !!..

உன் பூவிழி வளிமையும் அறியேன் !!..

உன் புன்னகையில் புதைந்து இருக்கும் அர்த்தமும் அறியேன் !!..

இன்று அறிந்தது ஒன்றே ஒன்று !!..

என்னுள் நீ !!..

நினைவாக ! கனவாக ! வார்த்தையாக !

இப்பொது என் தமிழாக !!..

Monday, January 18, 2010

இது போதும் எனக்கு !!..


அதி காலை ஒளியில்
ஐந்து மணிப் பறவைகள் !!..
இருளை அகற்றும் சூரியஒளியில்
பள்ளியெழுச்சி பாடும் !!..
உன் பாதை கொலுசு சத்தம்
என் துயில் கொள்வேன் !!..
என் கண்கள் உன்னை காணும்
இது போதும் எனக்கு !!..


வெளியே மழை
வேடிக்கை பார்க்க ஜன்னல்
ஒற்றை நாற்காலி
அதில் நீயும் நானும்
இது போதும் எனக்கு !!..


நிலா ஒளிரும் இரவு,
திசை தொலைந்த காடு
ஒற்றையடிப்பாதை
உன்னோடு பொடிநடை
இது போதும் எனக்கு !!..

Tuesday, January 5, 2010

நண்பா உன் பிரிவில் !!..


நட்பில் கவலைக்கு இடமில்லை


சோற்றுக்கு வழி இல்லாத போதும்
சுருட்டுக்கு மட்டும் பஞ்சமில்லை


வகுப்பு ஏட்டில் பெயர் இருக்கிறது, ஆள் யார்?
அது வாத்தியருக்கு விளங்கவில்லை


ஆறு மாதம் முக்கி முக்கி படிக்க வேண்டியதை
ஒரே இரவில் எப்படி படித்தோமோ தெரியவில்லை


ஒரே வண்டியில் நான்கு பேர் சென்று
சறுக்கி விழுந்த போது வலி தெரியவில்லை


எதையும் நண்பணிடத்தில் மறைத்ததில்லை
சுற்றுச் சூழலை நினைத்ததில்லை


பல மொழிகள் பேசும் மாணவர்கள் இருந்தாலும்
நட்புக்கு மட்டும் மொழி இருந்ததில்லை


வகுப்பை தவிர கல்லூரியின் மற்ற இடங்களில்
நாம் கால் வைக்காத இடமில்லை


வந்த முதல் நாளில், தெரிந்தவர் தவிர
வேறொருவருடன் பேசி நினைவில்லை


ஒரே வாரத்தில் மாமன் மச்சான் உறவு
எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை


விடுமுறை விட்டாலும், வீடு திரும்பவில்லை
நட்புக்கு மட்டும் என்றும் விடுமுறையில்லை


இப்படியெல்லாம் பழகிய நமக்கு இன்று
யார் யார் எங்கிருக்கிறோம் என்பதே தெரியவில்லை


யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்,


யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்,
பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,
வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை,
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளி நாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளி யுண்டாகும்
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்,
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்.

பாரதியின் அச்சம் இல்லை அச்சம் இல்லை !!..


அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே
இச்சகத்தில் உள்ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே !!..

துச்சமாக எண்ணி நம்மை தூறு செய்த போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே !!..

பிச்சை வாங்கி உண்ணும் வாழ்கை பெற்றுவிட்ட போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே !!..

இச்சை கொண்ட பொருளெல்லாம் இழந்து விட்ட போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே !!..

கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசும் போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே !!..

நச்சை வாயிலே கொணர்ந்து நண்பரோடு போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே !!..

பச்சைஉநே ஐந்து வெ படைகள் வந்த போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே !!..

உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே !!..