Tuesday, December 22, 2009

காணி நிலம் வேண்டும்


காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும்; அங்கு

தூணில் அழகியதாய் -- நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய், அந்தக்

காணி நிலத்திடையே -- ஓர் மாளிகை
கட்டித் தரவேண்டும் ; அங்கு

கேணி யருகிலே -- தென்னை மரம்
கீற்று மிள நீரும்,

பத்துப் பன்னிரண்டு -- தென்னை மரம்
பக்கத்திலே வேணும் ; அங்கு

கத்துங் குயிலோசை -- சற்றே வந்து
காதிற் பட வேணும் ; என்ன்

சித்தம் மகிழ்திடவே -- நன்றாய் இளங்
தென்றல் வர வேணும்,

பாட்டுக் கலந்திடவே -- அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் ; -- எங்கள்

கூட்டுக் கிளியினிலே -- கவிதைகள்
கொண்டுதர வேணும் ; அந்த

காட்டு வெளியினிலே, -- அம்மா ! நின்றன்
காவலுற வேணும் ; - என்றன்

பாட்டுத்திறத்தாலே - இவ்வையத்தைப் பாலித்திட வேணும் !!...




கண்ணம்மா என் காதலி


சுட்டும் விழிச்சுடர்தான் - கண்ணம்மா
சூரிய சந்திரரோ ?..

வட்டக் கரிய விழி - கண்ணம்மா
வானக் கருமை கொல்லோ ?..

பட்டுக் கருநீலப் - புடவை
பதித்த நல்வயிரம்,

நட்ட நடுநிசியில் - தெரியும்
நசித் திரங்களடீ !!..

சோலை மல ரொளியோ - உனது
சுந்தர புன்னகைதான் ?

நீல கடலலையோ - உனது
நெங்சி லலைகளடீ !!..

கோலக் குயிலோசை - உனது
குரலி னிமையடீ !!..

வாலைக் குமரிடீ - கண்ணம்மா
மருவக் காதல் கொண்டேன்..

சாத்திரம் பேசுகிறாய் - கண்ணம்மா
சாத்திர மேதுக்கடீ ?

ஆத்திரங் கொண்டவர்க்கே - கண்ணம்மா
சாத்திர முண்டோடீ ?

மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்பு செய்வோம்

காத்திருப் பேனோடீ - இதுபார்
கன்னத்து முத்த மொன்று !!.. (கண்ணம்மா)

பாரதியின் நல்லதோர் வீணை



நல்லதோர் வீணை செய்தே அதை --
நலங்கெடப் புழுதியில் றிவதுண்டோ ?..

சொல்லடி, சிவசக்தி, -- எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,

வல்லமை தாராயோ, -- இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கோ ?

சொல்லடி சிவசக்தி, -- நிலச்
சுமையென வாழ்திடப் புரிகுவையோ ?

விசையுறு பந்தினை போல -- உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,

நசையறு மனைக்கேட்டேன் -- நித்தம்
நவமென சுடர்தரும் உயீர்க்கேட்டேன்,

சையினைத் தீசுடினும் -- சிவ
சக்தியைப் பாடும்நல் அகம்கேட்டேன்,

அசைவறு மதிகேட்டேன் ; இவை
அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ !!..